தாய்,தங்கை,தோழி மற்றும் துணைவி
July 20, 2013
இரவையும் பகலாக்கி
பாசத்தைப் பாலாக்கி
கருவறையில் தாலாட்டி
கண்ணீரில் சிரிக்க வைத்த
தங்கத் தாயாக!
விளையாட்டில் பொம்மையாக
அப்பா திட்டுக்களின் காரணமாக
பாசச் சண்டைகளில் எதிரியாக
பாசமலர்த் தங்கையாக!
பயணத்தில் துணையாக
வினைக்கெல்லாம் தீர்வாக
நினைவுகளில் கண்ணீராக
என்றென்றும் தோழியாக!
வாழ்க்கைத் துணையாக
முதுமையில் தோழியாக
இன்பதுன்பமெல்லாம் இவளாக
ஓருயிர் மனைவியாக!
இத்துணைப் பெண்கள்
எந்தன் வாழ்விலே
பெண்ணில்லை என்றால்
எவனுக்கும் இல்லை
களிப்பும் கண்ணீரும்!